Posts

கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் இன்று அமல்-RTPCR Test.

Image
https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration புதுடெல்லி: சில நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பாதிப்பின்மை சான்றிதழ் கட்டாயம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும், பயணத்தை தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை 'ஏர் சுவிதா ' வலைத்தளத்தில் பதிவேற்றவும் குறிப்பிட்ட நாடுகளின் பயணிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Saravanaas Wall Mart

Image
  https://myshopprime.com/saravanan458/lrwp1qq

பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் சில..

Image
 பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் சில.. பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!! * பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியைவிட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். * கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியினால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கிறதென்றால், அதாவது பிரசவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ...

ஊறுகாய்-வற்றல்-வடாம்.

Image
 30 வகைவற்றல்வடாம்_ஊறுகாய் வெயில் காலம் துவங்கிவிட்டாலே, மொட்டை மாடியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு... வற்றல், வடாம், ஊறுகாய் வகைகளை தயாரிக்கத் துவங்கிவிடுவார்கள் இல்லத்தரசிகள் பலர். பொரியல் செய்யாத சமயத்தில் அவசரத்துக்குக் கைகொடுப்பதுடன், வீட்டில் உள்ளவர்களை 'இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு சாப்பிட வைக்கும் அளவுக்கு சுவையில் அசத்தும் 30 வகை வற்றல், வடாம், ஊறுகாய் வகைகளை தயாரித்து வழங்கி, உங்களுக்கு ஆருயிர்த் தோழியாய் உதவிக்கரம் நீட்டுகிறார், சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார். சம்மர்ல தயார் பண்ணுங்க... வருஷம் முழுக்க டேஸ்ட் பண்ணுங்க! கொத்தவரங்காய் வற்றல் தேவையானவை: கொத்தவரங்காய் - அரை கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. செய்முறை: நல்ல கொத்த வரங்காய்களாக தேர்வு செய்து... அடி, நுனி நீக்கிவிட்டு அலசி, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை நன்றாக வடித்துவிட்டு, வெயிலில் காயவிடவும். இது நன்கு காய வேண்டும் (அதாவது உடைக்கும் பதம் வரும் வரை). பிறகு, எடுத்து பத்திர...

நம்ம வாழ்கைல தினமும் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்...!!!

Image
 நம்ம வாழ்கைல தினமும் கடைபிடிக்க வேண்டிய சில செயல்கள்...!!! 1. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு..... 2. மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்..... 3. நன்றி, இந்த வார்த்தையை முடிந்தவரை அதிகம் உபயோகி..... 4. உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்..... 5. உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து... 6. ரகசியங்களைக் காப்பாற்று..... 7. புதிய நண்பர்களைத் தேடிக்கொள். பழைய நண்பர்களை மறந்துவிடாதே..... 8. தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்..... 9. உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்..... 10. தைரியமாக இரு. உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி..... 11. ஒரு போதும் மற்றவரை ஏமாற்றாதே..... 12. கவனிக்கக் கற்றுக்கொள். சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்..... 13. கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே..... 14. உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்...... 15.மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனு...